வவுனியாவில் சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்!!(படங்கள்)

782

மாவட்ட சமூக சேவை அலுவலகத்துடன் இணைந்து வவுனியா தெற்கு வலயப்பணிமனை, SEED(சீட்), ஓகன், வரோட், உயிரிழை ஆகிய நிறுவனங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையும் இணைந்து நடாத்தும் சர்வதேச விசேட தேவையுடையோர் தின விழா வவுனியாவில் நடை பெற்றது.

இதன் முதன் நிகழ்வாக ஒமந்தை மத்திய கல்லூரியிலிருந்து அதிகாலை 5.30மணிக்கு சக்கர நாற்காலி ஓட்டம் ஆரம்பமாகி காலை 7.30 மணியவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை வந்தடைந்தது.

அத்துடன் காலை 7.30 மணியளவில் வவுனியா பஸ் நிலையத்தில் பேருந்துக்களுக்கு விசேட தேவை உடையோரின் ஆசனங்களுக்கான ஸ்ரிக்கர்கள் ஒட்டுதல் நிகழ்வு நடை பெற்றது.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

விசேட தேவையுடையோர்கள் தொடர்பான உரிமைகளை வென்றெடுக்கும் பேரணி வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுரம் வழியாக புகையிர வீதி வழியாகச் சென்று சைவப்பிரகாச பாடசாலை வழியாக வவுனியா காலாச்சார மண்டபத்தை வந்தடைந்தது.

இந் நிகழ்வில் ப.சத்தியலிங்கம் (சுகாதார அமைச்சர்), திரு.ரோகன புஸ்பகுமார (அரசாங்க அதிபர் ), திருமதி.சரஸ்வதி மோகநாதன் (மேலதிக அரசாங்க அதிபர்), திருமதி.நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம்- வடக்கு மாகாணம்), வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் (பணிப்பாளர்- பொது வைத்தியசாலை- வவுனியா), க.உதயராஜா (பிரதேச செயலாளர் வவுனியா), மற்றும் நகரசபை செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் அரச, அரசார்பற்ற ஊழியர்கள், பொதுமக்கள் விசேட தேவையுடையோர் என பலரும் கலந்து கொண்டனர்.

12277174_424374497755871_1354387063_n 12311997_424372334422754_947339685_n 12312016_424369874423000_331596098_n 12312326_424374077755913_637344640_n 12312568_424372381089416_1073513625_n 12319315_424374454422542_1325724337_n 12319318_424373674422620_32386885_n 12319634_424373687755952_1980920417_n 12325049_424370081089646_1903140632_n 12325228_424373731089281_1653345344_n 12346677_424368791089775_1587786548_n 12346902_424384377754883_1601757247_n 12348357_424372401089414_824020028_n 12348408_424371824422805_208758737_n 2122336394_424374421089212_1844898408_n