மழையால் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 269!!

1399

1

மழையால் தமிழகத்தில் 269 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார். தமிழக மழை சேதம் பற்றி லோக்சபாவில் அறிக்கை சமர்ப்பித்து அவர் தெரிவித்தபோது..

வெள்ள சேதத்தால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 என தெரியவந்துள்ளது.

சென்னையில் 40 சதவீத தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையின் 30 குழுக்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளன.

பிரதமர் நரேந்திரமோடி, நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார். மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.