வவுனியா பொது வைத்தியசாலையிலும் இன்று வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநோயாளர் பிரிவு ஸ்தம்பிதம் அடைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
எனினும் வார்ட்டுகளில் தங்கியிருந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் நோயாளர்களை அனுமதிப்பதிலும் அவசர சேவையிலும் வைத்தியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இப்பணிப் பகிஷ்கரிப்பு சம்பந்தமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க வவுனியா ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான வைத்தியர் எம்.எம்.அனஸ் அவர்களிடம் வினவியபோது,
அரச வைத்திய அதிகாரிகள் சங்க மத்திய குழுவின் அலோசனையின் பேரில் நாடு தளுவிய பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் அங்கமாகவே தாங்களும் இதில் ஈடுபட்டள்ளதாகவும் தேசிய சம்பள ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சம்பள முரன்பாட்டை தீர்த்து வைக்காமை, 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகளுக்கு வரிவிதிப்பு,
வாகன அனுமதிப்பத்திரம் நிறுத்தப்பட்டமையை மையமாக வைத்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் மத்திய குழுவினால் தீர்மாணிக்கப்பட்டிருந்தது எனவும் எனினும் நோயாளர்களுக்கான அவசர சிகிச்சை அளிப்பதில் தாங்கள் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் மேலும் எதிர்காலத்திலும் மத்திய குழுவினால் எடுக்கப்படும் தீர்மாணங்களுக்கு தாங்கள் ஆதரவளிப்போம் என்றும் மேலும் தெரிவித்தார்.






