
வவுனியா ஆலடி தோணிக்கல் பகுதியில் இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் வசித்தவந்த தனபாலசிங்கம் கஜன் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை ரயிலில் மோதி இறந்திருந்த நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரத சாரதி வவுனியா ஆலடி தோணிக்கல் பகுதியில் இவரின் உடலை கண்டெடுத்து வவுனியா புகையிர நிலையத்தில் ஒப்படைத்ததாக புகையிர நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது.
இறந்தவரின் உடல் வீட்டிற்கு அருகில் இருக்கும் புகையிரத கடவையில் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மேற்கொண்டு வருவதுடன மனைவி, உறவினர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.





