சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, சற்று இயல்பு நிலை திரும்பிய சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
சென்னையில் அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் தாம்பரம், பிற புறநகர் பகுதிகளில் மழை பெய்கிறது.
மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதை காணமுடிகிறது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
சென்னைக்கு மழை ஆபத்து இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த சில மணிநேரங்களிலேயே கனமழை கொட்டத் தொடங்கியுள்ளது. காலை முதல் வானம் தெளிவாக தென்பட்ட நிலையில் லேசாக வெயிலடித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் கனமழை கொட்டத் தொடங்கியுள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புபணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.






