வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று (04.12.2015) மாலை 3.30 மணியளவில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பொது மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோண், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்கழுவின் பணிப்பாளர் திருமதி டிலுக்சி டயஸ் விக்கிரமசிங்க, ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு வியாபார நிலையங்கள், பேரூந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பனவற்றில் விழிப்புணர்வு செயற்றிட்டத்தினை மேற்கொண்டதுடன், ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டது.






