வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தால் தமிழக மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு!!

1387

இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழக மக்களுக்கு உதவ வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுச் சேர்க்கும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் என்பன கோரப்படுகின்றன.

உதவி செய்ய விரும்புவோர் வவுனியா குருமண்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும்.

மேலும் உதவிப் பொருட்களை சேகரிப்பதற்கான வாகனம் இன்று உங்கள் வீதிகளில் வருகை தரவுள்ளது. நல்லுள்ளம் கொண்ட அனைவரும் தங்களால் முடிந்த உதவியை வழங்குமாறு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினர் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர்புகளுக்கு
0772260469
0776550632
0776288923
0774988519

தொடர்புபட்ட செய்தி : தமிழக மக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம்..

11 12 13 15 16