வவுனியாவில் ஆறுமுகநாவலர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!(படங்கள்)

791

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த ஆறுமுகநாவலர் நினைவு தினம் இன்று (05.12.2015) காலை 8.30 மணியளவில் வவுனியா இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள ஆறுமுகநாவலர் சிலைக்கு முன்னாள் கடும் மழைக்கு மத்தியில் திரு ஐ.கதிர்காமசேகரன் ஆசிரியர் தலைமையில் இடம் பெற்றது .

இந்த நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், முன்னாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன் ), மத்தியஸ்த சபைத் தலைவரும் அதிபருமான சி.வரதராசா, தேசமான்ய க.சிவஞானம், இறைபணிசெம்மல் வை.செ.தேவராசா

வர்த்தகர்கள் விக்னா, சிவசுப்ரமணியம், நந்தன், முற்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், தேசபந்து இ.கௌதமன், ஊடகவியலாளர்கள் கபில், காந்தன், வசந்தன், கதீசன் ஆகியோருடன் சி.சி.டி.எம் .எஸ் பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாலை அணிவித்தும் மலர் தூவியும் ஆறுமுக நாவலருக்கு வணக்கம் செய்த பின் ஆறுமுகநாவலரின் பெருமைகள் பற்றி ஐ.கதிர்காமசேகரன் ஆசிரியர் உரையாற்றினார்.

சந்திரகுமார் (கண்ணன்) அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைய வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் முன்னெடுக்கும் தத்தளிக்கும் தமிழக உறவுகளுக்கு கை கொடுப்போம் என்ற சொல்லுக்கு இணங்க தேசபந்து இ.கௌதமன் அவர்களாலும் தமிழ் விருட்சத்தாலும் ஒரு தொகுதி உலர் உணவு பொதி ஊடகவியலாளர் காந்தனிடம் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

DSCN9620 DSCN9621 DSCN9624 DSCN9627 DSCN9628 DSCN9629 DSCN9631 DSCN9633 DSCN9634 DSCN9635 DSCN9638 DSCN9639 DSCN9641 DSCN9642 DSCN9643 DSCN9646 DSCN9650 DSCN9651 DSCN9652 DSCN9658 DSCN9664 DSCN9666 DSCN9668 DSCN9677