6000 பேரை புதிதாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!!

511

86606_akhila-viraj-kariyawasamஆசி­ரியர் பற்­றாக்­கு­றை­யி­னை நிவர்த்தி செய்யும் நோக்கில் 6000 பேர் புதி­தாக ஆசி­ரியர் சேவையில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார்.

கல்வி நிர்­வாக சேவையில் 852 வெற்­றி­டங்கள் நில­வு­கின்­றன. எதிர்­வரும் காலங்­களில் அவற்றைப் பூர்த்தி செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து அதிபர் சேவைக் கான ஆட்­சேர்ப்பு இடம்­பெ­ற­வில்லை. அத்­துடன், பாட­சா­லை­களில் நிலவும் விஞ்­ஞான பாடத்­திற்­கான ஆசி­ரியர் பற்­றாக்­குறை நிவர்த்தி செய்­யப்­படும். 6000 ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் எதிர்­வரும் 6 மாதங்­க­ளுக்குள் நிவர்த்தி செய்­யப்­படும்.

மேலும், கல்வி நிர்­வாக சேவையில் காணப்­படும் 1190 பதவி வெற்­றி­டங்கள் அரச சேவைகள் திணைக்­க­ளத்தின் அனுமதி கிடைத்தவுடன் பூரணப்படுத்தப்படும் என வும் தெரிவித்துள்ளார்.