பன்னல – வகுருவெல பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
45 வயதான தாய் மற்றும் 20 வயதான அவரது மகளுமே சம்பவத்தில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.