சுவர் இடிந்து விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் பலி!!

812

Girl-On-Bike-Pakistan

தொம்பே – தெல்கோட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுவர் இடிந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியால் சென்று கொண்டிருந்த போது, அதன் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார். மேலும் தெல்கோட – கதுபோட பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.