பெருந்தொகை கிரடிட்காட், பணத்துடன் ஒருவர் கைது!!

542

credit-cards_2007247b

சட்டவிரோதமாக ஒருதொகை பணம் மற்றும் கிரடிட் காட்களை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். துபாய் நோக்கி செல்லவிருந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் வசமிருந்து 109 கிரடிட்காட்கள் மற்றும் 10 இலட்சத்து 20,000க்கும் அதிகமான பெறுமதியுடைய வௌிநாட்டு நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இவருக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.