வவுனியாவில் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

513

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று (10.12.2015) வவுனியாவில் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பிரதேச செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ஐக்கிய அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றிற்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

வவுனியா பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் உரிமைகள் சம்பந்தமாக ஏற்படுகின்ற பிரச்சனைகளை விரைவாக தீர்த்து வைக்கும் பொருட்டும் பெண்களுக்கு வழிகாட்டும் முகமாகவும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பெண்கள் உரிமைகள் சம்பந்தமாக செயற்படும் அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தன.

இந்நிகழ்விற்கு பிராந்திய சுகாதார அதிகாரிகள், கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பெண்கள் சிறுவர் துஸ்பிரயோக பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

P1010022 P1010023 P1010024 P1010025 P1010026 P1010027 P1010028 P1010029 P1010030 P1010031 P1010032 P1010033 P1010034 P1010035 P1010036 P1010037 P1010038 P1010039 P1010040