டெங்கு நோய் பரவும் அபாயம்!!

570

Mosquito on skin_0

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் கடந்த 10 தினங்களில் கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டெங்கு பரவும் இடங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநாகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

இதேவேளை உலகில் முதல் தடவையாக டெங்கு வைரஸிற்கு எதிரான தடுப்பூசியினைப் பயன்படுத்த மெக்சிக்கோ அனுமதி வழங்கியுள்ளது. டெங்வெக்ஸியா (Dengvaxia) என பெயரிடப்பட்டுள்ள இது பிரான்சின் சனோபி (Sanofi) எனும் நிறுவனத்தினால் அறுமுகப்படுத்தப்பட்டுள்ளது.9 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கிளிடையே இந்த தடுப்பூசியைப் பாவிக்க மெக்சிக்கோ அரசு அனுமதி வழங்கியுள்ளது.