வடமாகாண சுகாதாரம் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இன்று (11.12.2015) காலை 11.30 மணியளவில் வவுனியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு எனும் கருப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக பிரதேச செயலாளர் திருமதி.ச.கர்ணன், மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.






