2010 ஆண்டுக்கு பிறகு வீட்டுக் கணணியின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

548

computer

இலங்கை வீட்டு தளபாட பாவனையாளர்களில் 24.6 வீதமானவர்கள் குறைந்தது ஒரு கணணிக்கு உரிமையாளர்களாக இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கணணி பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்த போது, வீட்டு கணணிப் பாவனையாளர்களில் 67 வீதமானவர்கள் தனது முதல் கணணியை 2010ம் ஆண்டுக்கும் 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொள்வனவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.மேலும் , கணணிக்கல்வி அறிவு அதிகமாகவுள்ள மாகாணமாக மேல் மாகாணமும் , குறைவாக உள்ள மாகாணமாக கிழக்கு மாகாணமும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட அடிப்படையில் , குறைந்த கணணிக்கல்வி அறிவுள்ள மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.15 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்டவர்களின் கணணி பாவனை அதிகமாக காணப்படுவதாகவும் இது மொத்த கணணிப்பாவனையில் 57.2 வீதமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.