
ரம்போடை நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். சிலாபம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று, பின்னர் மீண்டும் திரும்புகையில் ரம்போடை நீர்வீழ்ச்சிக்கு சென்று வேளையே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத்தவர்கள் சிலாபம் – முகுனுவடவன பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 33 வயதான இரு பெண்கள் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





