வவுனியாவில் உணவகங்களில் இப்படியும் நடக்கின்றது!!

759

Vavuniya

வவுனியாவில் பஸ் நிலையத்தை அண்மித்த பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டுப் பார்சல்களில் சாப்பாடுகளை குறைத்துப் பொதிசெய்து வழங்குவதாக பலர் வவுனியா நெற்றைத் தொடர்புகொண்டு தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தாம் இடியப்பம், தோசை, வடை போன்ற உணவுகளுக்கு பணம் செலுத்தி வீட்டுக்குக் கொண்டுசென்று உணவுப் பார்சலை திறந்து பார்க்கும் போது, உணவுகளின் எண்ணிக்கையில் குறைத்து பொதி செய்யப்பட்டிருப்பதாகவும், உதாரணமாக 10 வடை வாங்கும் சந்தர்ப்பத்தில் வீட்டிற்குச் சென்று பார்சலைப் பிரித்துப் பார்த்தால் 9 வடை பொதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதே போன்று ஏனைய உணவுப் பொருட்களிலும் குறைத்து பொதி செய்வதாகவும் தெரிவித்த அவர்கள்,

இச் செயல் ஓரிரு முறை நடைபெற்றால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என்றும் தாம் தொடர்ச்சியாக இவ்வாறு எமாற்றப்படுவதாகவும், மேலும் ஒரு வடைக்காகவோ அல்லது ஓரிரு இடியப்பங்களுக்காகவோ தாம் எவ்வாறு அவர்களிடம் முறையிடுவது என்றும் தெரிவித்தனர்.

வவுனியாவில் மேலும் சில உணவகங்களிலும் இது போன்று நடைபெறுவதாகவும் பொதுமக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

இது ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு தெரிந்து நடைபெறுகின்றதா, அல்லது பொதி செய்பவர் இவ்வாறு செய்கின்றாரா என்பதை எம்மால் உறுதிசெய்ய முடியவில்லை. இது போன்று தொடர்ந்து நடைபெறக் கூடாது என்பதற்காகவே இச் செய்தியை வெளியிடுகின்றோம்.