
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தை சீல் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இன்று காலை திடீரென டெல்லி மாநில அரசின் தலைமை செயலகம் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகம் ஆகியவற்றில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த விடயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிகாரப்பகீர்வு தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே இன்று வரை பிரச்னை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதல்வர் கெஜ்ரிவால் சமூக வலைத்தளத்தில், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடியின் கோழைத்தனமான செயல் இது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், மோடி ஒரு கோழை என்றும் சைக்கோ எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.





