விவசாயிகள் இன்று கோவணத்துடன் அலரிமாளிகையை நோக்கி!!

512

pokerstars-boycott

உரமானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் இன்று கோவணத்துடன் அலரிமாளிகையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளனர்.விவசாயிகளின் பாரம்பரிய ஆடையான கோவணத்தை அணிந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சங்கத்தின் அமைப்பாளரும் மக்கள் விடுதலை முண்ணனியின் மேல் மாகாண சபையின் உறுப்பினருமான நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 400 விவசாய சங்கங்களிலிருந்து 3000க்கும் அதிகமான விவசாயிகள் கலந்துக் கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.