வவுனியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்களில் சேவையாற்றிய பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17.12.2015) வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த சேனாரட்ன கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் உள்ள சிவில் பாதூகப்பு குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராமங்களின் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.






