
பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகக் கூறப்படும் பாடசாலை காவலாளி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் காவலாளியாக இருக்கும் அதே பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் சிறுமியை கடந்த திங்கட்கிழமை பலவந்தமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று காட்டுப்பகுதி ஒன்றுக்குள் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அவதானித்த கிராம மக்கள் குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இதனையடுத்து குச்சவெளி பொலிஸார் அவரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





