
டிசம்பர் மாதம் முதல் பதினைந்து நாட்களுக்குள் மாத்திரம் மேல் மாகாணத்தில், வீதி சட்டங்களை மீறிய சாரதிகள் 41768 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவற்துறை தலைமையக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபர் அமரசிறி சேனாரத்தன இதனை தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இவ்வாறு 15903 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.





