வவுனியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவர் கைது : மேலும் இருவர் தப்பி ஓட்டம்!!

552

arrests

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று (17.12.2015) காலை 8 மணியளவில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதை அவதானித்த வர்த்தக நிலைய உரிமையாளர் அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்களுடன் வந்த மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர். கைது செய்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன் அவர்களின் பயணப்பொதியில் சந்தேகம் ஏற்பட்டு சோதனை மேற்கொண்டபோது அவர்களிடமிருந்து பொய்த் துப்பாக்கிகள், கையுறைகள், மற்றும் களவுகளுக்கு பயன்படுத்தும் பொருட்கள் என்பனவற்றை கைப்பற்றியதுடன் தப்பி ஓடிய இருவரின் தகவல்களையும் திரட்டிவருகின்றனர்.

இவர்கள் ஒரு குழுவாக இணைந்து மேற்கொள்ளவிருந்த கொள்ளை முயற்சி பொலிசாரின் நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தென்பகுதியிலிருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது.