அப்பாவி சிறுமியை திட்டமிட்டு ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்த இளைஞன் சிக்கினார் !!

486

1 (11)

அக்­க­ரைப்­பற்று கண்­ண­கி­புரம் பிர­தே­சத்தில் 10 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த இளைஞனை 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது­பற்றி தெரிய­வ­ரு­வ­தா­வது:

குறித்த சிறுமி தனது வீட்டின் முற்­றத்தில் விளை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது பக்­கத்து வீட்டைச் சேர்ந்த நபர் சிறு­மியை கடைக்குச் சென்று கைத்­தொலை­பே­சிக்கான மீள்­நி­ரப்பு அட்­டையொன்றை வாங்­கி­வ­ரு­மாறு பணத்தைக் கொடுத்­துள்ளார். இத­னை­ய­டுத்து சிறுமி கடைக்கு சென்று மீள்­நி­ரப்பும் அட்­டையை வாங்கிக் கொண்டு பக்­கத்து வீட்­டிற்கு உரி­ய­வ­ரிடம் கொடுக்கச் சென்­ற­போது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளார்.

இதையடுத்து பெற்­றோர் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்த நிலையில் குறித்த இளை­ஞரை கைது செய்­துள்­ள­துடன் பாதிக்­கப்­பட்ட சிறு­மி அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.