
சுகயீனம் காரணமாக வவுனியா புளியங்குளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நேற்று பிற்பகல் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
புளியங்குளத்தைச் சேர்ந்த நகுலேஸ்வரன் கரன் ஒன்றரை வயதுடைய குழந்தையே சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளது.
முட்டு வருத்தம், காய்ச்சல் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மரண விசாரணைக்காக உடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.





