குத்தகைக் கடன்கள் பெறுவதற்கு அனுமதி!!

445

Ranil-Wickremesinghe

பொது மக்களுக்கு குத்தகை கடன்களை வங்கிகள் தொடர்ந்தும் வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

வங்கிகளில் வைப்பிலுள்ள பணத்தில் 1 முதல் 10 மில்லியன் ரூபா வரை மீள பெறும் போது 2% கட்டணம் மற்றும் 10 மில்லியன்களுக்கு மேல் மீளப் பெறும் போது 3% கட்டணமும் அறவிடப்படும் என்று வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மேலதிக கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.