அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!!

448

ma

நிர்வாகம், அரசியலமைப்பு மற்றும் நீதித் துறை பேன்றவற்றிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட யுகத்தை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நிறைவேற்று அதிகார முறையில் காணப்படக்கூடிய எல்லையற்ற அதிகாரங்களை முடிந்தளவு குறைப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிச் சேவை சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 11 மாத காலத்தில் நல்லாட்சியை உண்மைப்படுத்தக் கூடிய அர்த்தமுள்ள பல தீர்மானங்கள் எடுத்ததாக அவர் கூறினார்.

நிர்வாகம், அரசியலமைப்பு மற்றும் நீதித் துறை பேன்றவற்றின் சமநிலையை பாதுகாத்து நாட்டின் அனைத்து துறைகளிலும் நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.