நீண்டகால முரண்பாடு கொலையில் முடிந்தது!!

628

Dead

கேகாலை – ஒலகங்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையே இவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் கேகாலை – ஒலகங்கந்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இந்தக் கொலை தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.