நான்கு வயது குழந்­தையை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் நான்கு மாதங்களின் பின் சிக்கினார்!!

756

1 (10)

நான்கு வயது குழந்­தையை துஷ்­பி­ர­யோ­கம் செய்த தாக நம்ப ப்படும் இளைஞர் ஒரு­வனை சம்­பவம் இடம்­பெற்று நான்கு மாதங்­களின் பின்னர் கைது ஆன­மடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வாரி­ய­பொல பிர­தே­சத்தைச் சேர்ந்த 25 வய­தான இளைஞர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

சந்­தேக நப­ர் கடந்த செப்­டெம்பர் மாதம் தனது உற­வுக்­காரக் குழந்­தை­யையே இவ்­வாறு துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தி­உள்ளார். ஆன­மடுவ நகரில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் நட­மாடிக் கொண்­டி­ருந்த குறித்த இளை­ஞரைச் சந்­தே­கத்தில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பின்னர் ஆன­மடுவ பொலிஸார் அவ­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணையின் போது அவ்­வி­ளைஞர் வாரி­ய­பொல பொலிஸ் பிரிவில் தனது உற­வுக்­கார குழந்­தையை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் வாரி­ய­பொல பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரு­பவர் என்­பதை உறுதிப்படுத்திக் கொண்­டுள்­ளனர்.