
மும்பையில் உறைந்து போகும் அளவுக்கு கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மும்பையில் இந்த ஆண்டு குளிர்காலம் வழக்கத்தை விட பொதுமக்களை அதிகமாக வாட்டி வதைத்து வருகிறது.
இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.இந்நிலையில், மும்பையில் நேற்று கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பனியின் தாக்கம் இருந்துள்ளது.Santacruz பகுதியில் நேற்று முன்தினம் 11.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 11.4 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
Colaba-வில் நேற்று முன்தினம் 17.8 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகி இருந்த நிலையில், நேற்று 17.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.மும்பையில் கடந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி பதிவாகிய 10.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே மிக குறைந்தபட்ச வெப்பநிலையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





