வவுனியா பூந்தோட்டம் சுனாமி நினைவு மண்டபத்தில் இன்று(26.12.2015) காலை 9.30 மணியளவில் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுடமன்ற உறுப்பினர் வினோதாரலிங்கம், நகரசபைச் செயலாளர் திரு.எஸ்.தர்மேந்திரா, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கவிஞர் மாணிக்கம் ஜெகன், பூந்தோட்டம் கிராமசேவையாளர், சமயத்தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆழிப்பேரலையால் உயிரிழந்த தமது உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்கள்.









