தனியாக வீடு திரும்பிய சிறுமி வல்லுறவு: தாயை நம்பாமல் நேரடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்ட சிறுமி !!

461

1 (10)

13 வயது சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­ 20 வயது இளைஞன் ஒரு­வர் சிலாபம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கரவிட்டாகார கொட­எலபிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியின் வீட்­டுக்கு அண்­மையில் வசிக்கும் இளை­ஞனே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார்.குறித்த சிறு­மியின் மூத்த சகோ­தரன் சிறு­மியும் அவ­ளது தாயும் வசிக்கும் வீட்­டுக்கு அரு­கா­மையில் வசித்து வந்­துள்­ளார்.

இதனால் இச்­சி­றுமி தினமும் இரவு வேளையில் தனது சகோ­த­ரனின் வீட்­டுக்கு தொலைக்­காட்சி நிகழ்ச்சி பார்ப்­ப­தற்­காகச் செல்­வதை வழக்­க­மாக க் கொண்டிருந்துள்ளார்.சம்­பவம் இடம்­பெற்ற தினம் இரவும் இச்­சி­றுமி வழமை போல தனது சகோ­த­ரனின் வீட்­டுக்கு தொலைக்­காட்சி நிகழ்ச்சி பார்ப்­ப­தற்­காகச் சென்­றி­ருந்து பின்னர் தனது வீட்­டுக்குத் திரும்பிக் கொண்­டி­ருந்­துள்ளார்.

இதன்போது சிறுமியை வழி­ம­றித்­துள்ள சந்­தேகநப­ர் அவளை பல­வந்­த­மாக தனி­யான இடம் ஒன்­றுக்கு இழுத்துச் சென்று இக்­குற்­றத்தைப்புரிந்துள்ளார்.தனது அயல்­வீட்­டுக்­கார இளைஞர் தன்னை இவ்­வாறு வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய சம்­ப­வத்தை தனது தாயிடம் கூறினால் எதுவும் நடக்கப் போவ­தில்லை என்­பதை ஊகித்துக் கொண்­டுள்ள இச்­சி­றுமி இவ்­வி­ட­யத்தை தமது பிர­தேச கிராம சேவை அதி­கா­ரி­யிடம் தெரிவித்து அவர் ஊடாக சிலாபம் பொலி­ஸா­ருக்கும் தெரி­வித்­துள்ளார்.இவ்­வாறு சிறு­மியின் தக­வ­லை­ய­டுத்து உடன் செயற்­பட்­டுள்ள சிலாபம் பொலிஸார் சந்­தேக நப­ரான இளைஞரைக் கைது செய்துள்ளனர்.