கை கால்கள் கட்டப்பட்டு வயோதிபர் கொலை – வெலிகமயில் சம்பவம்!!

475

Murder_title

வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் கை கால்கள் மற்றும் வாய் என்பவற்றை துணி ஒன்றினால் கட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெலிகம, கொடவில, சுமுது உயன பகுதியில் வசிக்கக்கூடிய 78 வயதுடைய ஒருவரே நேற்றிரவு 9 மணியளவில் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. மற்றைய நபர் 39 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கான வாடகைப் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.