வவுனியாவில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு!!(படங்கள்)

614

வவுனியா குருமன்காடு பகுதியிலிருக்கும் மூன்று வர்த்தக நிலையங்களில் நேற்று(27.12.2015) இரவு உடைத்த திருடர்கள் அங்கிருந்த பணம் மற்றும் சில பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

நேற்று தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு சென்றுள்ளனர்கள். இன்று காலையில் தமது வர்த்தக நிலையங்களுக்கு வந்தபோது தமது வர்த்தக நிலையங்களை திருடர்கள் உடைத்துள்ளதையும், பணம் மற்றும் பொருட்களை களவாடிச் சென்றிருந்த விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிசார் அவ்விடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரில் இருக்கும் கடைத் தொகுதியில் குறித்த வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன. பல்பொருள் விற்பனை நிலையம், கைத்தொலைபேசி விற்பனை நிலையம், அழகு சாதன விற்பனை நிலையம் என்பனவற்றிலேயே மேற்படி திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். மேலதிக விசாhரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3 4