வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உள்ள ஆலங்குளம் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆலய போதகர் தலமையில் நத்தார் (கிறிஸ்மஸ்) தின ஆராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது
இன் நிகழ்வில் போது சிறப்பு அதிதிகளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, வவுனியா வடக்கு முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஜெயரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் தனக்கு 2015ம் ஆண்டு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் இவ் ஆலயத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகளை ஆலயபோதகரிடம் வழங்கினார்.
சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டவர்களினால் மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. இன் நிகழ்வில் பெரும்திரளான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.






