காதலித்த குற்றத்திற்காக இளம்பெண் மற்றும் அவரது பெற்றோரை சுட்டுக்கொன்ற உறவினர்கள்!!

611

gun-firing

காதல் விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவி, அவரது பெற்றோர் ஆகியோர் உறவினர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள கேவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த வகீல் யாதவ் (60), மனைவி அனிதா தேவி (55) அவர்களின் மகள் 19 வயது பெண் புஷ்பா குமாரியுடன் வசித்து வந்துள்ளனர்.

புஷ்பா குமாரிவிக்ரம்கஞ்ச் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில், தன்னுடன் படித்த மாணவர் ஒருவரை காதலித்துள்ளார்.இதற்கு புஷ்பாவின் உறவினர்கள் பிரதீப் யாதவ் மற்றும் அமித் யாதவ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பிரதீப் மற்றும் அமித் இருவரும் புஷ்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.அவர்கள் புஷ்பாவின் பெற்றோருடன் அவரது காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதையடுத்து துப்பாக்கியை எடுத்த அந்த நபர்கள், புஷ்பா மற்றும் அவரது தாயை சுட்டுக் கொன்றுள்ளனர்.புஷ்பாவின் தந்தையை பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த வகீல் யாதவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.ஆனால் அவர் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்துள்ளார்.தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.