வவுனியாவில் ஊடகவியாளர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பிணையில் விடுதலை!!

494

 

Pinai

வவுனியா நகரில் கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று 29.12.2015 அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறாகும் வகையில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இதனால் அவ்வாறான வர்த்தகங்களை அங்கிருந்து நிறுத்துமாறு வவுனியா நகர சபை தெரிவித்தது. இதன்படி நகரசபை ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு வர்த்தகர்கள் – நகர சபை ஊழிர்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது அங்கிருந்த வர்த்தகர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டார்.

இன்று நீதவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றதுடன் ஊடகவியளாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை 25,000 சரீர பிணையில் விடுதலை வழங்கி 26.01.2016 திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.