வவுனியா இராமனூர் புளியங்குளத்தில் வசிக்கும் கலைக்சலா வவுனியா புளியங்குளம் இந்து கல்லூரியில் உயர்தரம் கலை பிரிவில் கல்வி கற்க்கும் மாணவி.
2009 இல் சிறுநீரகம் பாதிக்கபட்டு தந்தை பாலசிங்கம் மரணமடைய தாய் இந்திராதேவியின் அரவணைப்புடனும், ஊக்கத்துடனும் கல்வி கற்று வரும் கலைக்சலாவுக்கு வறுமை ஒரு தடையாக இருக்க கூடாது என்ற காரணத்தினால் சமுக ஆர்வலரும், ஊடகவியலாளருமான கபில் அவரின் நிலையை தமிழ் விருட்சம் அமைப்புக்கு தெரிய படுத்தியதன் மூலம் கனடா உறவுகள் அமைப்பின் மூலம் மாதாந்தம் 3000 ரூபா வீதம் 6 மாத படிப்பு செலவு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் புளியங்குளம் இந்து கல்லூரி அதிபர் திரு பரமேஸ்வரநாதன், சமூகஆர்வலர் திரு செ.சபாநாதன், சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான கபில், சமூக ஆர்வலர் சிவநேசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) ஆகியோர் கலந்து கொண்டு வங்கி வைப்பில் இடப்பட்ட வங்கி வைப்பு புத்தகத்தை வழங்கி வைத்தனர் .
தனது மகளின் கற்றல் செயற்பாட்டுக்கு என்ன செய்வது என தெரியாது என ஜோசித்துக் கொண்டிருக்கும் போது கனடா உறவுகள் தமிழ் விருட்சம் மூலம் கை கொடுத்துள்ளமை மகிழ்ச்சி தருவதாகவும் இந்த உதவி மகள் படிப்பு முடியும் வரை தொடரவேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.






