பிரித்தானிய விசா பெற்றுக்கொள்ள பிணைத் தொகை வைப்புச் செய்ய நேரிடும்!

512

UK-visasa

பிரித்தானிய விசா பெற்றுக்கொள்ள இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவாகள் பிணைத் தொகையொன்றை வைப்புச் செய்ய நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களைச் சேர்ந்த ஆறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் விசா விண்ணப்பங்களின் போது பிணைத் தொகைப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. அனைத்து வகையிலான விசாக்களுக்கும் இவ்வாறு பிணைத் தொகை அறவீடு செய்யப்பட மாட்டாது.

விசிட் விசாவிற்காக விண்ணப்பிக்கும் நபர்களிடமிருந்து 3000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் பிணையாக அறவீடு செய்யப்பட உள்ளது. இந்தப் பிணைத் தொகை மீள அளிக்க்க் கூடிய வகையில் அறவீடு செய்யப்படுகின்றது.

விசா வழங்கப்பட்ட குறித்த காலப்பகுதிக்குள் நாடு திரும்பினால் பிணைத் தொகையை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்ப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய நடைமுறைக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.