இங்கிலாந்து குட்டி இளவரசர் பெயரில் பரவும் கணணி வைரஸ்!!

594

baby

இங்கிலாந்து இளவரசர் ஜோர்ஜ் பெயரில் வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயரிட்டுள்ளனர். அரச குடும்பத்து வாரிசு பற்றிய செய்தியை படிக்க, புகைப்படங்களை பார்க்க உலக மக்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த ஆவல் எப்படி வினையாக முடிகிறது என்று தெரியுமா ஃபேஸ்புக்கில் ராஜ குழந்தை பற்றிய வீடியோ குறித்த இணையதள இணைப்பு போஸ்ட் செய்யப்படுகிறது.

அந்த லிங்கை கிளிக் செய்தால் வீடியோ பிளேயரை அப்டேட் செய்ய கேட்கிறது. நீங்கள் ஓகே என கிளிக் செய்தால் வைரஸ் உங்கள் கணனியில் தரவிறங்கி கணனியில் உள்ள தகவல்கள், வங்கி தொடர்பான தகவல் உள்ளிட்டவைகளை ஸ்கேன் செய்துவிடுகிறது. அதனால் அரச குழந்தை பற்றிய லிங்க் இருந்தால் அதை கிளிக் செய்துவிடாதீர்கள்.