வவுனியாவில் இளைஞன் மீது கத்திக்குத்து!!

646

Kathi

வவுனியாவில் நேற்று (01.01.2016) மதியம் இடம்பெற்ற சம்பவத்தில் இளைஞர் ஒருவர் மீது கத்தி குத்திற்கு இலக்கான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மதியம் வீதியால் சென்ற சமயம் உறவினர் ஒருவரினால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்நாட்டினகுளம் பகுதியைச் சேர்ந்த நேசரட்ணம் தனுசன் என்ற 24 வயதுடைய இளைஞர் மீதே கத்தியால் குத்தப்பட்டுள்ளது. முன் விரோதம் காரணமாக இவர்கள் இரு வீட்டாரிற்கும் அடிக்கடி வாய்தர்க்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கத்தியால் குத்தியவர் இவரின் உறவினர் என்பதும் அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவருகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.