வவுனியா சந்தை வாகனத் தரிப்பிடத்தின் அவலநிலை : கவனமெடுப்பார்களா உரியவர்கள்?

653

 
 
வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள நவீன சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறனர். சந்தைக்கு வந்துசெல்வோரின் வாகனங்கள் தரித்து நிற்பதற்கான வாகனத் தரிப்பிடம் வவுனியா நகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இத் தரிப்பிடமானது வருடாந்த குத்தகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டு குத்தகைதாரர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இங்கு வாகனங்களை விடுவதற்கு 30 ரூபாவரை அறவிடப்படுகின்றது. ஆனால் இத் தரிப்பிடமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் இதனால் தாம் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மக்கள் தெரிவிக்கிறனர்.

இவ்விடத்தை புனரமைக்கச் சொன்னால் குத்தகைதாரர் சரி செய்ய மறுப்பதாகவும் பற்றுச்சீட்டு வழங்குபவர் தெரிவிப்பதாக இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இத் தரிப்பிடத்தை புனரமைக்க வேண்டியது குத்தகைதாரர்களின் பொறுப்பா? அல்லது நகரசபையின் பொறுப்பா? உரியவர்களே இது உங்களின் கவனத்திற்கு.

12442844_911561245565898_466328125_n 12459597_911561262232563_1554146463_n 12459852_911561198899236_1612608376_n 12468259_911561208899235_1896698685_n 12483411_911561222232567_1629249896_n 12483467_911561215565901_767352033_n index