வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் 8 மாணவிகள் 3A சித்தி பெற்று சாதனை!!

1110

 
 
நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவிகள் 8 பேர் அனைத்துப் பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று (3A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதன்படி வர்த்தகப் பிரிவில் 4 மாணவிகள் 3A சித்திகளையும், கலைப் பிரிவில் 2 மாணவிகள் 3A சித்திகளையும், விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளில் தலா ஒரு மாணவி 3A சித்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வர்த்தகப் பிரிவு

1. கயலினி மகேந்திரன் 3A – மாவட்ட ரீதியில் 2ம் இடம்
2. நவீதா கந்தசாமி 3A – மாவட்ட ரீதியில் 3ம் இடம்
3. சயந்தினி ஹரிகரன் 3A – மாவட்ட ரீதியில் 6ம் இடம்
4.சரணியா சின்னத்தம்பி 3A – மாவட்ட ரீதியில் 7ம் இடம்

விஞ்ஞானப் பிரிவு

5. சுகனியா பாலகுமார் 3A – மாவட்ட ரீதியில் 2ம் இடம், தேசிய ரீதியில் 81ம் இடம்

கணிதப் பிரிவு

6. காயத்திரி மகேந்திரகுமாரன் 3A – மாவட்ட ரீதியில் 2ம் இடம், தேசிய ரீதியில் 488ம் இடம்

கலைப் பிரிவு

7. ச.நிவிதா 3A – மாவட்ட ரீதியில் 5ம் இடம்
8. இ.ஹசன்தினி 3A – மாவட்ட ரீதியில் 10ம் இடம்

சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துகின்றோம் பகுதியில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழையுங்கள் 0772602904

DSC_0213 DSC_0214 DSC_0222 DSC_0223 DSC_0226 DSC_0227 DSC_0228