வவுனியாவில் கிராமசேவையாளருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

615

வவுனியா மதவுவைத்தகுளம் கிராமசேவையாளருக்கு எதிராக இன்று (05.01.2016) காலை 9 மணியளவில் வவுனியா மதவுவைத்தகுளம் கிராமசேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மதவுவைத்தகுளம் கிராமத்தில் சேவையாற்றும் கிராமசேவையாளர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் எமது கிராமத்திற்க வந்த குடிநீர் திட்டத்திற்கு சிறுவர் பாடசாலையை பயன்படுத்துவதாகவும் கிராமத்திற்கு வரும் உதவிகளை தனக்கு அறிமுகமாவனர்களுக்கே வழங்குவதாகவும் இவ்விடயம் சம்மந்தமாக வவுனியா பிரதேச செயலாளரிடத்தில் முறையிடச் சென்றபோது எம்மை கீழ்த்தனமான முறையில் நடாத்தி எம்மை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியதுடன் எனிமேல் உங்களது கிராமத்திற்கு வரும் திட்டங்களை வழங்க முடியாது என்று எச்சரித்துள்ளார் என கிராமக்கள் தெரிவித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்ததையடுத்து கிராமசேவையாளர் மற்றும் உதவியாளர் அலுவலகத்திற்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சம்பவ இடமத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு ஆர்ப்பாட்டத்திலிருந்த மூவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

20160105_091534 20160105_091545 20160105_091559 20160105_091603 20160105_091609 20160105_091624 20160105_091648 20160105_091809 20160105_092132 20160105_092725 20160105_092730