வவுனியாவில் வர்த்தகத் துறையில் விபுலானந்தக் கல்லூரி மாணவன் முதலிடம்!!

613

 

 

thanuskanth_vavunia_001

நேற்றுமுன்தினம் வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற வவுனியா விபுலானந்தக் கல்லூரி மாணவன் கிருஸ்ணசாமி தனிஸ்காந் தனது பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கும் போது பின்வருமாறு தெரிவித்தார்.

வடபகுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம். இம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் இந்த நிலையை அடைவதற்கு பல ஆசிரியர்களும், தனியார் கல்வி நிலையங்களும் பங்காற்றியுள்ளன. அதேபோல் 2016 உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களும் எனக்கு உதவியுள்ளார்கள்.

இவ்வாறு எல்லோரது உதவியும் கிடைத்தமையால் தான் நான் இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். அதனால் அவர்களுக்கு முதல் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

எமது பிரதேசம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம். எமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் உள்ளது.
நான் கணக்காளராக வந்து எமது மண்ணில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த கிருஸ்ணசாமி தனிஸ்காந் அவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துகின்றோம் பகுதியில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழையுங்கள் 0772602904