வவுனியாவில் விஞ்ஞானப் பிரிவில் தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் செந்தில்காந்தன் லக்சிகன் முதலிடம்!!

779

 

laxikan_vavuniya_001

நேற்று முன்தினம் வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் செந்தில்காந்தன் லக்சிகன் விஞ்ஞான பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார். தேசிய ரீதியில் 39வது இடத்தையும் பெற்றுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர்..

நான் இந்த நிலைக்கு வருவதற்கு உதவிய ஆசிரியர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
எதிர்காலத்தில் நான் இதயநோய் சம்பந்தமான வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.

இதற்காக முயற்சி செய்து தற்போது மாவட்ட மட்டத்தில் முதல்நிலை பெற்று படிப்பைத் தொடரவுள்ளேன். தாய் மண்ணில் இருந்து இதய நோய் சிகிச்சை நிபுணராக பணியாற்ற விரும்புகிறேன். அதற்காக தொடர்ந்தும் உழைப்பேன் எனத் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த செந்தில்காந்தன் லக்சிகன் அவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துகின்றோம் பகுதியில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழையுங்கள் 0772602904