வவுனியாவில் தொடரும் மழையினால் 27 குடும்பங்கள் இடப்பெயர்வு!!(படங்கள்)

700

வவுனியாவில் தொடர்ச்சியான பெய்துவரும் மழை காரணமாக இதுவரை 27 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும்மழை பெய்துவரும் நிலையில் பல குளங்கள் பெருக்கெடுத்துள்ளதுடன் தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் குடும்பங்கள் உட்பட குளங்களை அண்டிய பல கிராமங்கள் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா வடக்கு – கனகராயன்குளம் வடக்கு கிராமசேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் இடம்பெயர்ந்துள்தாகவும்,

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.

2 3 1610096_807560809366329_4826845456852892018_n 1937162_807560746033002_8796514323727668184_n 11235042_807560732699670_4748888338903900959_n 12400432_807560652699678_4289376953052456292_n 12418098_807560749366335_4620216923611868181_n 12509139_807560639366346_77264457627513928_n 12509870_1717442361826196_3532999896554793226_n 12522935_807560649366345_8936630525327743932_n