வவுனியாவில் இன்புளுவன்சா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

786

Virus

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இன்புளுவன்சா வைரசின் நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அதன் காரணமாக பலர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும் பொது மக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் அவதானமாக இருக்குமாறும் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களிடம் இருந்து மற்றவர்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பாக தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான கலந்துரையாடல் இன்று (06.01.2016) காலை வவுனியா பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைரோயஸிஸ்ட் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற வைத்திய நிபுணர் ஜெயமஹா அவர்களினால் நடாத்தப்பட்டது.

இந் நோய்த்தாக்கம் தடிமன், இருமல், தும்மல், காய்ச்சல் போன்றவற்றால் இன்புளுவன்சா வைரசின் தாக்கம் ஏற்படுவதாகவும் இன்புளுவன்சா நோய் தொற்று தாக்கத்திற்கு உள்ளானவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு தும்மல், இருமல் ஏற்படும்போது கைக்குட்டையினை பயன்படுத்துமாறும், முகத்தினை மூடி தும்மலை கட்டுப்படுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக 3 தொடக்கம் 5 நாட்களுக்கு நீடிக்குமாறும் இந் நோய்தாக்கம் எற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சையினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்த வைத்திய நிபுணர் இதன் தாக்கம் அதிகரித்தால் உயிரிழக்க நேரிடலாம் என்பதையும் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித்தாய்மார் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இத்தாக்கம் ஏற்படுவது அதிகம் என்பதால் பொது இடங்களில் குறிப்பாக சன நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கைகழுவும்போது நன்றாக சவர்க்காரம் இட்டு சுத்தமாக கழுவுவதன் மூலம் இந் நோய் தொற்றை 50 வீதமானதை கட்டப்படுத்த முடியும் என்றும் வைத்திய நிபுணர் தெரிவித்தார்.