ஆட்டோ செலுத்தியே அப்பா என்னைப் படிக்க வைத்தார் : வவுனியாவில் 3A சித்தி பெற்ற மாணவி காயத்திரி மகேந்திரகுமார்!!

1386

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் கணிதப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 2ம் இடத்தை பெற்று வவுனியா மண்ணிக்கு பெருமை சேர்த்த காயத்திரி மகேந்திரகுமார் அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் பின்வருமாறு தெரிவித்தார்..

எனது பெயர் காயத்திரி மகேந்திரகுமாரன் 2015 உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளேன். நான் தரம் ஒன்றில் இருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றேன்.

நான் தரம்5 புலமைப்பரீட்சையில் 152 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தேன். சாதரணப் பரீட்சையில் 8A,B ( ஆங்கிலப் பிரிவு) சித்திடைந்தேன். எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், என் சகதோழிகள் எனக்கு பாரிய ஒத்துழைப்பு தந்தனர்.

எனக்கு சிறுவயது முதல் கணிதப் பாடத்தில் அதிக ஆர்வம் இருந்தது. பொறியியலாளர் ஆவது எனது கனவு, லட்சியம்.

எனக்கு எப்போழுதும் எனது பெற்றோர்கள் ஆதரவாக இருந்தார்கள். எமது தாய் மண்ணில் இருந்து பணிபுரிய வேண்டும் என்பதே எனது கனவு எனத் தெரிவித்தார்.

எனக்கு எப்போழுதும் எனது பெற்றோர்கள் ஆதரவாக இருந்தார்கள். எமது தாய் மண்ணில் இருந்து பணிபுரிய வேண்டும் என்பதே எனது கனவாகும். அடிக்கடி வெள்ளம் வருவதினால் எங்களின் வீடு படிப்பதற்கு ஏற்ற இடமாக அமையாததினால் நான் எனது உறவினர் வீட்டினிலே உயர்தர படிப்பை மேற்கொண்டுவந்தேன் எனத் தெரிவித்த அவர் ஆட்டோ செலுத்தியே என்னை அப்பா படிக்கவைத்தார் எனத் தெரிவித்தார்.

வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

IMG_1801 IMG_1807 IMG_1809 IMG_1811 IMG_1816 IMG_1819 IMG_1821